ரஷ்யா - உக்ரைன் போர்.. 13,500 வீரர்கள் பலி.. உக்ரைன் தகவல்..!
ரஷ்யா - உக்ரைன் போர்.. 13,500 வீரர்கள் பலி.. உக்ரைன் தகவல்..!

ரஷ்ய அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. 20-வது நாளாக நடைபெற்று வரும் இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘மார்ச் 15-ம் தேதி வரை 13,500 ராணுவ வீரர்கள், 81 விமானங்கள், 95 ஹெலிகாப்டர்கள், 404 பீரங்கிகள், 1,279 ஆயுதம் ஏந்திய வாகனங்கள், 640 வாகனங்கள், 3 போர்க்கப்பல்கள் உள்ளிட்டவை ரஷ்ய படை இழந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

