Theme Check

ரஷ்யா நடத்துவது தாக்குதல் அல்ல.. இது இனப்படுகொலை.. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு !!

ரஷ்யா நடத்துவது தாக்குதல் அல்ல.. இது இனப்படுகொலை.. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு !!

ரஷ்யா நடத்துவது தாக்குதல் அல்ல.. இது இனப்படுகொலை.. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு !!
X

உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலை செய்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் புதைக்குழியில் இருந்து 400க்கும் மேற்பட்ட உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ukraine

கீவ் புறநகர் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை சித்ரவதை செய்து ரஷ்ய படையினர் கொன்றுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அந்நாட்டின் அதிபர், வொலோதிமீர் ஸெலென்ஸ்கி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நாங்கள் உக்ரைன் குடிமக்கள். எங்கள் நாட்டில் 100க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். அந்த இன மக்கள் இன்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ரஷ்யாவின் கொள்கைக்கு அடிபணியவில்லை என்பதே இந்த இன அழிப்புக்குக் காரணம். கீவ் நகரைச் சுற்றி நடந்தவை ரஷ்ய படையினரால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை.

ukraine

21 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இது நடந்து கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தல். இங்கு தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்போது நான் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே, முதலில் போரை நிறுத்த வேண்டும்; அதன்பின்னர் ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.

போரை நிறுத்தினால் எங்களுடைய ராணுவம் மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும். மேற்கத்திய நாடுகளிடம் இருந்து போதுமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால் நாங்கள் நடுநிலையாக இருக்கத் தயார். ஆனால், எங்களுக்கு யாரும் உத்தரவாதம் கொடுக்கவில்லை.

ukraine

உக்ரைன் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எந்த சட்டத்தின் மூலமாக என்ன தண்டனை சரியானது என்று தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன், என்று பேசியுள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it