மோசமான ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா திட்டம்? - இங்கிலாந்து எச்சரிக்கை

மோசமான ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா திட்டம்? - இங்கிலாந்து எச்சரிக்கை

மோசமான ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா திட்டம்? - இங்கிலாந்து எச்சரிக்கை
X

உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்து வெளியுறத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரஷ்யா- உக்ரைன் மோதல் ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன், அது பல ஆண்டுகளாக இருக்கலாம்.

russia attack

ரஷியா வலுவான சக்திகளைக் கொண்டுள்ளது. இருந்தபோதும் உக்ரேனியர்கள் தைரியமானவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் தங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக நிற்க உறுதியாக உள்ளனர். உக்ரேனியப் படைகள் ரஷ்ய ராணுவத்தின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்து வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்னும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும். இந்த போர் புதினின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம். இந்தப் போரில் அவர் மிகவும் விரும்பத்தகாத வழிகளைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார் என்று நான் அஞ்சுகிறேன். இந்த மோதல் மிகவும் இரத்தக்களரியாக இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்.

russia attack

ரஷ்யா இன்னும் மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் உலகம் தயாராக இருக்க வேண்டும். இருப்பினும், உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கவனித்து வருகிறது, இதனால் புதினுக்கு தனிப்பட்ட முறையில் கடுமையான விளைவுகள் இருக்கும், என்று அவர் எச்சரித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it