Theme Check

பள்ளி முழுவதும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்த SORRY!! காரணம் என்ன?

பள்ளி முழுவதும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்த SORRY!! காரணம் என்ன?

பள்ளி முழுவதும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்த SORRY!! காரணம் என்ன?
X

பெங்களூருவில் உள்ள சாந்திதாமா என்ற தனியார் பள்ளியில் சுற்றுச்சுவர்கள், படிக்கட்டுகள் என அனைத்து இடங்களிலும் Sorry.. Sorry என்ற வாசகம் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.

தற்போது இருக்கும் 2K மாணவர்கள் ஒழுக்கம் என்றால் என்னவென்று கேட்கும் அளவுக்கு வளர்கின்றனர். சிறுவயதிலேயே இன்டர்நெட், சினிமா என்று கைக்கு எளிதில் கிடைப்பதால் அவர்கள் வளரும் போக்கு சரியானதாக இல்லை.

அப்படி 2K மாணவர்கள் செய்த காரியம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாந்திதாமா என்ற தனியார் பள்ளியில் சுற்றுச்சுவர்கள், படிக்கட்டுகள் என அனைத்து இடங்களிலும் Sorry.. Sorry என்ற வாசகம் சிவப்பு நிறத்தில் எழுதியிருந்தனர்.

sorry

இதுகுறித்து காவல்துறையினருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த போலீஸார் அவற்றை முழுவதுமாக ஆய்வு செய்தனர். பள்ளியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் இருசக்கர வாகனத்தில் டெலிவரி பாய் வேடத்தில் இரண்டு பேர் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் தோல்வியால் பள்ளி மாணவர்களே யாராவது இப்படி எழுதியுள்ளார்களா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி சுவர் முழுவதும் Sorry என எழுதப்பட்டு இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it