கோவில்களுக்கு அருகே மது விற்பனைக்கு தடை..!!
கோவில்களுக்கு அருகே மது விற்பனைக்கு தடை..!!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலின் கருவறைக்கு அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:
அயோத்தி ராமர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியை சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல மதுரா கோவிலை சுற்றி செயல்பட்டு வந்த 37 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story

