கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்படும் பீர் விற்பனை.. இது புதிய திட்டம் !
கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்படும் பீர் விற்பனை.. இது புதிய திட்டம் !

இந்தியா உள்பட உலக நாடுகளில் பீர் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். இதிலும் தற்போது இந்தியாவில் கோடைக்காலம் என்பதால் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பீர் தயாரிப்பு குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து இந்த பீர் தயாரிக்கப்படுகிறது.
அதாவது இந்த கழிவு நீர், முதலில் சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும். பொதுவாக பீர் தயாரிப்புக்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. சிங்கப்பூரின் தண்ணீர் வாரியம், இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்து 'நியூ-ப்ரியு' என்ற பீரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது முதன்மையாக கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சமீப ஆண்டுகளில் அந்நாட்டில் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கமாகும். சிங்கப்பூர் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை சவாலை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அவற்றை நிவர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான வழிகளில் இதுவும் ஒன்று ஆகும். 'நியூ-வாட்டர்' என்பது வடிகட்டப்பட்ட திரவமாகும், இது கழிவுநீரில் இருந்து உருவாகிறது. பெரிதும் பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, அதன் பிறகே உபயோகத்துக்கு வருகிறது. நாட்டில் உள்ள கடைகள் மற்றும் பார்களில் இந்த பீர் விற்பனைக்கு வர உள்ளது.
newstm.in