ரஷ்யாவில் டிவி, செல்போன் விற்பனை நிறுத்தம்- சாம்சங் அதிரடி அறிவிப்பு !!
ரஷ்யாவில் டிவி, செல்போன் விற்பனை நிறுத்தம்- சாம்சங் அதிரடி அறிவிப்பு !!

உக்ரைன் மீது நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல் 10ஆவது நாளை எட்டியுள்ளது. உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் தொடர்ந்து ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது. உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷ்யா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் என பல்வேறு தரப்பும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், சாம்சங் நிறுவனம் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரஷ்யாவில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால், சாம்சங் நிறுவனத்தில் செல்போன், டிவி உள்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சாம்சங் நிறுவனத்தின் பிற சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. எங்களின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அவ்ர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. எங்கள் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு $6 மில்லியன் நன்கொடை அளிக்கிறது, என்று தெரிவித்தார்.

ஆப்பிள், சோனி, கூகுள், டிஸ்னி, யூனிவர்செல், INTEL, BMW, FORD, HONDA உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.
newstm.in

