இந்தியாவிடம் மருத்துவ உதவி கோரும் சனத் ஜெயசூர்யா !

இந்தியாவிடம் மருத்துவ உதவி கோரும் சனத் ஜெயசூர்யா !

இந்தியாவிடம் மருத்துவ உதவி கோரும் சனத் ஜெயசூர்யா !
X

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து, திணறி வருகிறது. அங்கிருந்து தமிழர்கள் ஆபத்தான முறையில் கடல் வழியாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தற்போது அரசியல் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இலங்கையில் மருந்துகள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் எவ்வித மருந்தும் இல்லாத நிலை ஏற்படும் என்பதால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

jayasurya

இந்த நிலையில் இந்தியாவிடம் மீண்டும் உதவியை கோருகிறது இலங்கை. இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து, அவசர மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொண்டார். இந்தியா அளித்து வரும் பெரும் உதவிக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் சனத் ஜெயசூர்யா.

இது குறித்து சனத் ஜெயசூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவை இந்திய தூதர் இன்று சந்தித்துப் பேசினார். இலங்கைக்கு அவசிய மருத்துவ உதவிகளை செய்து கொடுக்குமாறு இந்தியாவை அவர் வலியுறுத்தினார். புற்றுநோய் மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை உடனடியாக வழங்கி உதவுமாறு தனது கோரிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.




newstm.in

Tags:
Next Story
Share it