Theme Check

சசிகலா திமுகவின் பி டீம்!!

சசிகலா திமுகவின் பி டீம்!!

சசிகலா திமுகவின் பி டீம்!!
X

சசிகலா திமுகவின் பி டீம் என்றும், அவர் மீது புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சசிகலா அதிமுகவின் கொடியை பயன்படுத்தியது, பொதுச் செயலாளர் என்ற பெயரை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவர் நேரடி வாக்கு மூலம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததை பார்க்கும்பொழுது, திமுகவின் பி டீம் தான் சசிகலா என்று எண்ணத் தோன்றுவதாக குறிப்பிட்டார்.

sasikala

மேலும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவது, பொதுச்செயலாளர் பெயடி பயன்படுத்துவது தொடர்பாக தாம் நீதிபதியிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விளக்கமளித்துள்ளதாகவும் அவரே தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா அறிமுகப்படுத்தும் வேட்பாளருக்கு அதிமுகவின் ஆதரவு இருக்குமா என்ற கேள்விக்கு, அதற்கு அதிமுகவின் தலைமை முடிவு எடுக்கும் என்று கூறினார்.

newstm.in

Next Story
Share it