Theme Check

அதிமுகவில் மீண்டும் சசிகலா? : எழுந்துள்ள ஆதரவு குரல்கள்!!

அதிமுகவில் மீண்டும் சசிகலா? : எழுந்துள்ள ஆதரவு குரல்கள்!!

அதிமுகவில் மீண்டும் சசிகலா? : எழுந்துள்ள ஆதரவு குரல்கள்!!
X

சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஒருங்கிணைத்து ஒரே கட்சியாக இருந்தால் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் என தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்-இன் பண்ணைவீட்டில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் டிடிவி தினகரன், சசிகலா இணைப்பு குறித்த ஆலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் சையது கான், " உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்டோம், அதிமுக தோற்றதற்கு காரணம் நாம் பிரிந்து இருந்ததால்தான் என அனைவரும் கூறினார்கள்.

ops

அந்த தவறு மீண்டும் நடக்கக் கூடாது என்பதனால்தான் நமது கட்சி ஒன்றாக இணைய வேண்டும். அதிமுக என்ற கட்சி ஒரே கட்சியாக இருந்தால் எந்த தேர்தல் ஆனாலும் வெற்றி பெறுவதற்கு நமக்குதான் வாய்ப்பிருக்கிறது என்று கூறி ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் கொடுத்துள்ளோம்.

அவரும் எங்களின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்" என்றார். இவரது கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it