Theme Check

அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறாரா சசிகலா.. திடீர் பரபரப்பு !!

அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறாரா சசிகலா.. திடீர் பரபரப்பு !!

அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறாரா சசிகலா.. திடீர் பரபரப்பு !!
X

அதிமுகவில் அதிகாரம் யாருக்கு என்பதில் உட்கட்சி பிரச்சனை உச்சத்தில் இருந்து வருகிறது. ஏற்கெனவே ஒ.பி.எஸ், இ.பி.எஸ் அணி யுத்தத்தில் இருக்கும் நிலையில், தொண்டர்களை சந்திக்க சசிகலா சுற்றுப் பயணம் தொடங்கி இருக்கிறார்.

அந்த வகையில்,அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்திற்கு மத்தியில் சசிகலா தரப்பினரும் களம் இறங்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

eps sasikala

அதுமுதல் இருதரப்பினரும் ஆங்காங்கே போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ஒருவரையொருவர் வசைபாடி படங்களை பதிவிடுவது, கருத்துக்களை தெரிவிப்பது என முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் அமைதி காத்து வந்த சசிகலா ஆதரவாளர்களும் திடீர் போஸ்டர் யுத்தத்தில் களம் இறங்கி இருப்பது உட்கட்சி பூசல் விவகாரத்தில் மேலும் பரபரப்பாகி உள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளரே! ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமே! என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

sfs

இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சசிகலா அதிமுக அலுவலகம் சென்றால் என்ன நடிக்கும் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.


newstm.in

Next Story
Share it