Theme Check

வாக்களிக்க வந்த போது கண்ணீர் மல்க பேசிய சசிகலா! காரணம் இதுதான்!!

வாக்களிக்க வந்த போது கண்ணீர் மல்க பேசிய சசிகலா! காரணம் இதுதான்!!

வாக்களிக்க வந்த போது கண்ணீர் மல்க பேசிய சசிகலா! காரணம் இதுதான்!!
X

இதுவரை ஜெயலலிதாவுடன் சேர்ந்துதான் வாக்களித்துள்ளதாகவும் இந்த முறை தனியாக வாக்களித்துள்ளதாக வி.கே.சசிகலா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தினர்.

அந்தவகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 113ஆவது வார்டு தியாகராய நகரில் அமைந்துள்ள வித்யோதயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வி.கே.சசிகலா தனது வாக்கினை செலுத்தினார்.

sasikala vote

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இதுவரை அக்காவுடன் (ஜெயலலிதா) சேர்ந்து தான் வாக்கு அளித்து இருக்கிறேன், அதை மனதில் நினைத்துக்கொண்டே வந்தேன். இந்த முறை தான் நான் தனியாக வந்துள்ளேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இது தமிழக அரசு நடத்தும் தேர்தல் அதை வைத்து ஆளுங்கட்சி அராஜகம் செய்யக்கூடாது என்ற அவர், தமிழக அரசும், காவல்துறையினரும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தேர்தலுக்கு எல்லா வசதிகளும் செய்தால் மட்டும் போதாது நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். தமிழக மக்களுக்கு அனைத்தும் தெரியும் அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள் என சசிகலா தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it