விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!!
விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.
இதையடுத்து, பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் , பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அறிவித்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும், தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

