இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... எங்கு தெரியுமா?
இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... எங்கு தெரியுமா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு நாட்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சின்னக்கல்லார், சோலையார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இரு தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

