பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் வேன் டிரைவர் கைது..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் வேன் டிரைவர் கைது..!

பள்ளிக்குச் சென்ற மாணவியை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவரை போக்சோவில் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று பள்ளிக்கு நடந்து சென்றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவரான பாண்டியன் (26) என்பவர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் பாண்டியனை கைது செய்தனர். பின்னர், வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
Next Story

