Theme Check

கும்பகோணம் அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் பலி..!!

கும்பகோணம் அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் பலி..!!

கும்பகோணம் அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் பலி..!!
X

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஐயங்கார் தெருவை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசன்னா (16) மற்றும் எருத்துக்கார தெருவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஹரிஹரன் (15) ஆகிய இருவரும் விடுமுறை தினத்தையொட்டி ஆற்றில் குளிக்க முடிவு செய்துள்ளனர்.

swim

அதற்காக தனது நண்பர்களுடன் நாதன்கோவில் திருமலை ராஜன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அரைகுறையாக மட்டுமே நீச்சல் தெரிந்திருந்த அவர்கள் இருவரும் ஷட்டர் அருகே ஆழம் அதிகமுள்ள பகுதிக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாணவர்களின் நண்பர்கள் உறவினர்களை வரவழைத்து இருவரது உடல்களையும் மீட்ட பட்டீஸ்வரம் போலீசார், பிரதே பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Patteswaram

பள்ளி மாணவர்கள் ஆற்று நீரில் முழங்கி உயிரிழந்த சம்பவம் நாதன்கோயில் பகுதியில் பெரும் சோகத்தினையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it