Theme Check

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் போக்சோவில் கைது!!

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் போக்சோவில் கைது!!

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் போக்சோவில் கைது!!
X

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஆதி முத்தமிழ்செல்வன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு ஆதி முத்தமிழ்ச் செல்வன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

arrest

அதன் அடிப்படையில் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அபிராமம் போலீசார் ஆசிரியர் ஆதி முத்தமிழ்ச் செல்வனை அபிராமம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆதி முத்தமிழ்செல்வன் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it