Theme Check

தலைமுடியை இழுத்து சண்டை போட்டுக் கொண்ட பள்ளி மாணவிகள்!!

தலைமுடியை இழுத்து சண்டை போட்டுக் கொண்ட பள்ளி மாணவிகள்!!

தலைமுடியை இழுத்து சண்டை போட்டுக் கொண்ட பள்ளி மாணவிகள்!!
X

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவிகள் ஒருவரையொருவர் தலை முடியை பிடித்து சண்டை போட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தான் தங்களது ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

இந்தநிலையில், அரசு உதவி நிதி பெறும் சாரா டக்கர் பள்ளியில் வகுப்பை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பும் வழியில் மாணவிகள் சிலருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறியது.

student fight

இந்த சண்டையை பள்ளி ஆசிரியை தடுக்க முயற்சித்தும், விடாப்பிடியாக தலை முடியை பிடித்து மாணவிகள் சண்டையிட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பேருந்தில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏற முயன்ற போது இந்த தகராறு ஏற்பட்டதாக மாணவிகள் கூறியதை அடுத்து அவர்களது பெற்றோர்களையும் வரவழைத்து மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த பேருந்து நிலையத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசாரை பாதுகாப்பு பணியில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

newstm.in

Next Story
Share it