Theme Check

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு.. வாழை கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு..!

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு.. வாழை கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு..!

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு.. வாழை கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு..!
X

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி, வாழை மற்றும் தோரணங்கள் கட்டி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன. அதன்பிறகு, அடுத்த வாரம் முதல் வழக்கமான வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ - மாணவியருக்கு 20 நாட்களில் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9.10 மணிக்கு பள்ளிகள் தொடங்கி மாலை 4.10 மணியுடன் முடிவடைகிறது.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Next Story
Share it