எச்ஐவி வைரஸை கண்டுபிடித்த விஞ்ஞானி காலமானார்..!
எச்ஐவி வைரஸை கண்டுபிடித்த விஞ்ஞானி காலமானார்..!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளரும், எச்ஐவி வைரஸை முதன்முதலில் கண்டுபிடித்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான விஞ்ஞானி லூக் மான்டேக்னியர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89.
இது குறித்து பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. முதன் முதலில் எச்ஐவி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு 2008-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எழுத்துப்பூர்வ அறிக்கையில், லூக் மான்டேக்னியருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், எய்ட்ஸ் நோய்க்கு எதிரான அவரது போராட்டம் மிகப்பெரியது என்றும் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மான்டேக்னியர் மத்திய பிரான்சில் உள்ள சாப்ரிஸ் கிராமத்தில் 1931-ல் பிறந்தார். நோபல் பரிசு இணையதளத்தின்படி, மான்டேக்னியர் போய்ட்டியர்ஸ் மற்றும் பாரிஸில் மருத்துவம் பயின்றவர்.
1957-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகள், மூலக்கூறு உயிரியல் துறையில் வேகமாக முன்னேறி வரும் ஒரு வைராலஜிஸ்ட் ஆக அவரை ஊக்கப்படுத்தியது என்று கூறப்படுகிறது.
அவர் 1960-ல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். 1972-ல் பாஸ்டர் நிறுவனத்தில் வைராலஜி துறையின் தலைவராக ஆனார். 1982-ல் எய்ட்ஸ் ஆராய்ச்சியில் தனது ஈடுபாட்டை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

