தகிக்கும் வெப்பம்… தமிழகத்தில் 5 இடங்களில் சதமடித்த வெயில்!!
தகிக்கும் வெப்பம்… தமிழகத்தில் 5 இடங்களில் சதமடித்த வெயில்!!

தமிழகத்தில் நேற்று 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது இயல்பு. அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது.
மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 6 பகுதிகளில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்தது.

ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி, வேலூர் ஆகிய 6 பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.
அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 40.5 செல்சியஸ் (104.5 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவானது. அடுத்ததாக மதுரை நகரில் 39.2 செல்சியஸ் (102.56 ஃபாரன்ஹீட் டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.
newstm.in

