Theme Check

காதலை ஏற்க மறுத்த 11ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து!!

காதலை ஏற்க மறுத்த 11ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து!!

காதலை ஏற்க மறுத்த 11ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து!!
X

திருச்சி அருகே மணப்பாறையில் தேர்வு முடிந்து வீடு திரும்பிய பிளஸ் 1 மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

அத்திகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று கடைசி தேர்வு முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொணடிருந்தார்.

அப்போது திருச்சி ரயில்ரோடு மேம்பாலம் பகுதியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர், திடீரென மாணவியின் கழுத்து உட்பட 10 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

knife

முதல் கட்ட விசாரணையில், மாணவியை, கத்தியால் குத்தி விட்டு தப்பிய பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த கேசவன் (22) என்பவர், கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோவில் கேசவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த மாதம் வெளியே வந்த கேசவன், தற்போது மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கேசவனை தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it