Theme Check

காவலருக்கு அரிவாள் வெட்டு.. கைதான போதை இளைஞர்கள் கை முறிந்தது !

காவலருக்கு அரிவாள் வெட்டு.. கைதான போதை இளைஞர்கள் கை முறிந்தது !

காவலருக்கு அரிவாள் வெட்டு.. கைதான போதை இளைஞர்கள் கை முறிந்தது !
X

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம், தற்போது போலீஸ் கமிஷன் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசோக் நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். உடன் பாதுகாப்புக்காக காவலர் சக்திவேல் சென்றுள்ளார்.

அசோக் பில்லர் அருகே நூறடி சாலையில் சென்றபோது அவ்வழியே கஞ்சா போதையில் ஒரே பைக்கில் மூன்று இளைஞர்கள் நீதிபதி காருக்கு முன்னாள் சென்றுள்ளனர். மேலும் காருக்கு குறுக்காக அங்கும் இங்கும் சென்று இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். காரில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல் கீழே இறங்கி இளைஞர்களை விலகி செல்லுமாறு கூறினார்.

அப்போது தகாத வார்த்தைகளால் காவலரை இளைஞர்கள் பேசியுள்ளனர். மேலும் அதில் ஒருவன் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளால் காவலர் சக்திவேலை வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில், படுகாயமடைந்த சக்திவேல் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

s

இதனையடுத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில், காவலர் சக்திவேலை வெட்டிய கண்ணகி நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவன் போலீசிடம் சிக்கினான். அவன் கொடுத்த தகவலின்படி தலைமறைவான புருஷோத்தமனின் கூட்டாளிகளான மனோஜ், நிஷாந்த் ஆகிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு ஆதம்பாக்கம் ராம்நகர் அருகே பதுங்கி இருந்த மனோஜ், நிஷாந்த் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசிடம் இருந்து தப்பி ஓடிய இருவரும் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர். இதில் மனோஜ், நிஷாந்த் இருவருக்கும் கை எழும்பு முறிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பிடிபட்ட புருஷோத்தமன் கழிவறையில் வழுக்கி விழுந்து கை முறிந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



newstm.in

Next Story
Share it