Theme Check

கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!

கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!

கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!
X

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக ரூ.36 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் சோதனையின்போது, சிறு வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத்தாவிட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it