Theme Check

அக்னிபாத் வீரர்களுக்கு செக்யூரிட்டி வேலை – பாஜக தலைவர் ஆணவப் பேச்சு!!

அக்னிபாத் வீரர்களுக்கு செக்யூரிட்டி வேலை – பாஜக தலைவர் ஆணவப் பேச்சு!!

அக்னிபாத் வீரர்களுக்கு செக்யூரிட்டி வேலை – பாஜக தலைவர் ஆணவப் பேச்சு!!
X

அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என பா.. தலைவர்கள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.. அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முக்கியமாக வட மாநிலங்களில் தீவிரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசிய பா.. தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களைச் சூறையாடித் தீ வைத்துள்ளனர்.

arrah-agneepath

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.. அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என பா.. தலைவர்கள் பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டு முடிந்த பிறகு அவர்கள் கையில் ரூ.11 லட்சம் இருக்கும். அவர்களின் நெஞ்சில் அக்னி வீரர் பதக்கம் இருக்கும்.

ஒருவேலை பா.. அலுவலகத்தில் நான் செக்யூரிட்டியை நியமிக்கிறேன் என்றால், அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுப்பேன் என்று மத்திய பிரதேச பா.. தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

bjp

அதேபோல் ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி, அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஓட்டுநர், எலெகட்ரீசியன், முடி திருத்துதல், சலவை செய்தல் உள்ளிட்ட திறன் பயிற்சியும் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் முடிந்து வெளியே செல்லும் போது இந்த திறன் பயிற்சிகள் அவர்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார். உரிமைகளுக்காக போராடி வரும் இளைஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பா.. தலைவர்கள் பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it