இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல - ஒரு கிராம் ரூ.4601-க்கு விற்பனை

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல - ஒரு கிராம் ரூ.4601-க்கு விற்பனை

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல - ஒரு கிராம் ரூ.4601-க்கு விற்பனை
X

சமீப காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஏதோ ஒரு நாள் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது.இதனால் நகை வாங்கும் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

கடந்த பிப் 02 ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 4,524 விற்பனையான நிலையில், இன்று பிப் 10 ஆம் தேதி 4,601-க்கு விற்பனையாகிறது

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,808-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து, ரூ.4,601-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமில்லாமல் ரூ.66,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it