செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு... புதிய தேதி அறிவிப்பு..!!
செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு... புதிய தேதி அறிவிப்பு..!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா பாத்திப்பு குறையத் துவங்கியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜூன் 2-ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான முன்னேற்பாடுகளை பல்கலைக்கழக அதிகாரிகள் செய்துவந்தனர்.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருக்கும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலையின் செமஸ்டர் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

