Theme Check

புதிய தலைமைச் செயலராக மூத்த பெண் அதிகாரி பொறுப்பேற்பு..!

புதிய தலைமைச் செயலராக மூத்த பெண் அதிகாரி பொறுப்பேற்பு..!

புதிய தலைமைச் செயலராக மூத்த பெண் அதிகாரி பொறுப்பேற்பு..!
X

கர்நாடக மாநில தலைமைச் செயலராக பணிபுரிந்து வந்த ரவிக்குமார் பணியில் இருந்து நேற்று (31-ம் தேதி) ஓய்வு பெற்றார்.

காலியான அந்த இடத்துக்கு, 1986-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த, பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட வந்திதா ஷர்மா நியமிக்கப்பட்டார்.

இவர், பெங்களூரு விதான் சவுதாவில் அதிகாரபூர்வமாக, மாநிலத்தின் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றார்.

இந்த பொறுப்பை வகிக்கும் நான்காவது பெண் அதிகாரியாவார். அத்துடன், 39 வது தலைமைச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய பதவிக் காலம் 2023-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி நிறைவு பெறும். அத்துடன், நிதித்துறை கூடுதல் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Next Story
Share it