Theme Check

வேட்பாளர் தேர்வில் அதிமுகவில் இழுபறி- ஓபிஎஸ், ஈபிஎஸ் பிடிவாதத்தால் திணறும் மூத்த தலைவர்கள் !!

வேட்பாளர் தேர்வில் அதிமுகவில் இழுபறி- ஓபிஎஸ், ஈபிஎஸ் பிடிவாதத்தால் திணறும் மூத்த தலைவர்கள் !!

வேட்பாளர் தேர்வில் அதிமுகவில் இழுபறி- ஓபிஎஸ், ஈபிஎஸ் பிடிவாதத்தால் திணறும் மூத்த தலைவர்கள் !!
X

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. திமுக 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

admk office

அதிமுக வேட்பாளர் 2 பேரில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவும், மற்றொருவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருப்பார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக உள்ளார். ஆனால் இந்த விசயத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலைக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் மேலும் ஒருவரை தேர்வு செய்வதில்தான் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

admk office

அதிமுக மற்றொரு வேட்பாளராக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அதன்படி எம்.பி பதவியைபெற முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.

சையது கானை எம்.பி.யாக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. சையதுகான் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவரை எம்.பி. ஆக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். வேட்பாளர் தேர்வில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் வேட்பாளர் தேர்வு தள்ளி போகிறது. மேல்சபை எம்.பி. பதவிக்கு விண்ணப்பிக்க 31ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் மூத்த தலைவர்கள் எப்படியாவது விரைவாக முடிக்க போராடி வருகின்றனர். நாளை வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என்று நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it