பரபரப்பு.. பாலியல் வன்கொடுமை வழக்கு.. மூத்த அரசியல் தலைவர் கைது..!
பரபரப்பு.. பாலியல் வன்கொடுமை வழக்கு.. மூத்த அரசியல் தலைவர் கைது..!

கேரளாவில், உம்மன் சாண்டி அரசை உலுக்கிய சோலார் பேனல் முதலீட்டு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண்ணிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கேரள ஜனபக்ஷம் (மதச்சார்பற்ற) தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.சி.ஜார்ஜை போலீசார் இன்று கைது செய்தனர்.
கேரள மாநிலம் பூஞ்சார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் (70). இவர், தொடர்ந்து 33 ஆண்டுகளான அந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் மீது, சோலார் பேனல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

அந்தப் பெண் அளித்த புகாரில், ‘பி.சி.ஜார்ஜ் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தைக்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு என்னை அழைத்தார். அங்கு சென்ற என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், செல்போனில் எனக்கு அநாகரீகமான முறையில் குறுஞ்செய்திகளையும் அனுப்பினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் பி.சி.ஜார்ஜை கைது செய்த கன்டோன்மென்ட் போலீசார், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

