#BIG NEWS:- மாணவர்களுக்கு தொடர் விடுமுறை.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
#BIG NEWS:- மாணவர்களுக்கு தொடர் விடுமுறை.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 1-ம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 19-ம் தேதி, ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
குறைந்தபட்சம் 4 அல்லது 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. தேர்தல் 19-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஞாயிறு வழக்கம்போல் விடுமுறை. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெற உள்ளது.
எனவே, 22-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் 23-ம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

