கடுமையாக வீசிய புயல் – 14 பேர் உயிரிழப்பு, 12,000 வீடுகள் சேதம்!!
கடுமையாக வீசிய புயல் – 14 பேர் உயிரிழப்பு, 12,000 வீடுகள் சேதம்!!

அசாம் மாநிலத்தில் பகுதிகளில் வீசிய கடுமையான புயல் காரணமாக 14 பேர் உயிரிழந்தனர்.
அசாமிய புத்தாண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை மற்றும் அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான புயல் வீசியது. இதனால் அசாமின் 12 மாவட்டங்களில் 21,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திப்ருகார் மாவட்டத்தில் 4 பேர், பர்பேட்டாவில் 3 பேர் மற்றும் கோல்பராவில் ஒருவர் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். பக்சா மாவட்டத்தில் 2 பேரும், திப்ருகாரில் ஒருவரும், டின்சுகியாவில் 3 பேரும் புயலால் உயிரிழந்தனர்.

மேலும், புயல் காரணமாக மொத்தம் 12,000 வீடுகள் சேதமடைந்தன. அசாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இம்மாத தொடக்கத்தில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
newstm.in

