Theme Check

செக்ஸ் டார்ச்சர்! கணவன் சாப்பாட்டில் 7 ஆண்டுகள் அதை கலந்த மனைவி!!

செக்ஸ் டார்ச்சர்! கணவன் சாப்பாட்டில் 7 ஆண்டுகள் அதை கலந்த மனைவி!!

செக்ஸ் டார்ச்சர்! கணவன் சாப்பாட்டில் 7 ஆண்டுகள் அதை கலந்த மனைவி!!
X

கேரளாவில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த கணவனின் சாப்பாட்டில் மனைவி 7 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் சரியில்லாதவர்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயம் மாவட்டம் பாலா நகரைச் சேர்ந்த சதீஷ் (38) - ஆஷா (36) தம்பதி விவகாரம் தான் தற்போது அங்கு பேசு பொருளாக மாறியுள்ளது. சதீஷ் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சதீஷ் இரவு வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் உடல்சோர்வு ஏற்பட்டு தூக்கம் வந்துவிடுமாம்.

ஒருவேளை சர்க்கரை நோயின் காரணமாக தனது உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக முதலில் நினைத்த அவர் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். இருப்பினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

sleep

இந்நிலையில் சதீஷ் சில நாட்கள் இரவில் வீட்டில் சாப்பிடாமல் கடைகளில் சாப்பிட்டு வந்துள்ளார். அந்த சமயத்தில் உடலில் எந்தப் பிரச்னையும் வரவில்லை. வழக்கம்போல சாப்பிட்ட உடனே வரும் தூக்கம், உடல் சோர்வு எதுவும் இல்லை.

அப்போதுதான் வீட்டு சாப்பாட்டில் ஏதோ இருக்கிறது என்று அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே சதீஷ் தன் மனைவியின் நெருங்கிய தோழியை சந்தித்து தனது பிரச்னைகளை கூறியுள்ளார். தன் மனைவியிடம் பேசி சந்தேகத்தை தீர்க்குமாறு கூறியுள்ளார்.

அப்போது தான் ஆஷா உணவில் ஒரு மருந்துப்பொருள் கலந்து கொடுத்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் ரகசிய கேமரா வைத்து ஆஷாவின் நடவடிக்கையை ஆராய்ந்தார். அப்போது, ஆஷா இரவு சாப்பாட்டில் மருந்து கலப்பதை உறுதி செய்தார்.

tablets

இதனையடுத்து சதீஷ் தன் மனைவி மீது பாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆஷாவை கைது செய்தனர். விசாரணையில், சதீஷ் மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து வந்ததால் மனநலம் சரியில்லாதவருக்கு கொடுக்கப்படும் மருந்தை கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

tablets

மேலும், சதீஷ் பெயரில் இருக்கும் சொத்துக்களை அபகரிக்கவும் ஆஷா திட்டமிட்டு வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

newstm.in

Next Story
Share it