வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை.. கொடூர இளைஞர் மீது மக்கள் ஆத்திரம் !!
வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை.. கொடூர இளைஞர் மீது மக்கள் ஆத்திரம் !!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் மாணிக்கரசி (46) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வீட்டினுள் வரும் போது அத்துமீறி இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்பெண் அதிர்ச்சியில் சத்தம் போடுவதற்கு முன் அந்த இளைஞர் வீட்டில் இருந்த அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். பின்னர் அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
அரிவாளால் இதில் நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டின் வெளியே அந்த பெண்ணின் கணவர் வரும் சத்தம் கேட்டதும் வீட்டின் பின்புறமாக ஓடி தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கனவே பழைய குற்றவாளி புகைப்படத்தை காண்பித்து அடையாளம் கேட்ட போது, புத்தேரிக்கு அருகாமையில் உள்ள ஆனப்பொற்றை பகுதியை சேர்ந்த 25 வயதான சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. சந்தோஷ் மீது ஏற்கனவே சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 வழக்குகள், பெண்களை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கு என 6 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
மேலும் 3 நாட்களுக்கு முன்பு தான் ஒரு வழக்கில் கைதாகி விடுதலையாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் தற்போதை சம்பவம் தொடர்பாக போலீசார் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் இக்கொடூரத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in

