Theme Check

கடையில் வேலை பார்த்த பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை... 6 முறை கருகலைப்பு!!

கடையில் வேலை பார்த்த பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை... 6 முறை கருகலைப்பு!!

கடையில் வேலை பார்த்த பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை... 6 முறை கருகலைப்பு!!
X

சிமெண்ட் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருபவர்,ஈரோடு மாவட்டம், கர்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 37 வயதான இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கடை உரிமையாளர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர், கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் உடல் மீது ஊற்றி தீக்குளித்தார். சுதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக வயிற்று வலியால் அவதிப்பட்ட வந்த பெண், அதற்கு சிகிச்சை பெற பணம் கேட்டு கடையின் உரிமையாளர் வீட்டுக்கு சென்றதாகவும், அவர் பணம் கொடுக்க மறுக்கவே பெண் தீக்குளித்ததாக கூறப்பட்டது.

Youth-arrested-for-setting-fire-to-girlfriends-house

இது தொடர்பாக அந்தப் பெண் கடிதம் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், “நான் கடந்த 11 ஆண்டுகளாக ‘விநாயகா செராமிக்ஸ்’ என்ற கடையில் வேலை பார்த்து வருகிறேன். என் குடும்ப சூழலை பயன்படுத்தி கடை உரிமையாளர் நவநீதன் என்னை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்தார். இந்த விஷயம் அவர் மனைவிக்கும் தெரியும். அவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால், என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடிக்கடி உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பார்.

இதுகுறித்து அவர் உறவினர்களிடம் சொன்னபோது, அவர்களும் என்னை மிரட்டினார்கள். என்னை போல் இருக்கும் அப்பாவி பெண்கள் வாழ்க்கையில் இது போன்று நடக்கக்கூடாது. எனக்கு 6 முறை கருகலைப்பு நடந்துள்ளது. என் மரணத்துக்கு நவநீதன் மற்றும் அவர் குடும்பத்தினர் தான் காரணம். என் குடும்பத்துக்கு எதுவும் தெரியாது. அவர்கள் பணம் பலம் உள்ளவர்கள் எனக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.

இனிமேல் என்னை போல் உள்ள அப்பாவிகள் இழக்கக் கூடாது. கடைசி இறப்பு நானாக இருக்க வேண்டும். இதுவரை அவர்கள் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அவர்கள் பொய் சொன்னால் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.” என்றும் கூறியுள்ளார்.

RS-puram

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் கூறும்போது, “அந்தப் பெண் பாலியல் தொல்லை காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம். அதனால், இந்த வழக்கில் கொலைக்கு தூண்டியதாக சில பிரிவுகளை மாற்றி விசாரித்து வருகிறோம். மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினர்.

Next Story
Share it