மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. கணித ஆசிரியர் போக்சோவில் கைது..!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. கணித ஆசிரியர் போக்சோவில் கைது..!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புது சூரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், புது சூரங்குடி, நடு சூரங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 268 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் தாமோதரன் என்பவர், பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளை வகுப்பறையில் ஆபாச வார்த்தையில் பேசுவதும், ஒருமையில் திட்டுவதும், தொடர்ந்து பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த மாணவிகள், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று, ஆசிரியர் தாமோதரனை பணியிட மாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் தாமோதரனை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
Next Story