ஷாருக் கான் மகன் வழக்கு: முக்கிய சாட்சி திடீர் மரணத்தால் பரபரப்பு !!
ஷாருக் கான் மகன் வழக்கு: முக்கிய சாட்சி திடீர் மரணத்தால் பரபரப்பு !!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீது பதிவான போதை பொருள் வழக்கில், முக்கிய சாட்சியாக இருந்த பிரபாகர் சைல் மாரடைப்பால் மரணம் அடைந்தது இந்த வழக்கில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு சொகுசு கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் பயணிகள் போல் கப்பலில் பயணம் செய்து திடீரென சோதனை நடத்தினர்.

இதில், போதை பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைதாயினர். இந்த வழக்கில், போதை பொருள் தடுப்பு பிரிவினரின் முக்கிய சாட்சியான கோசாவி என்பவர், வழக்கை முடிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசியதை கேட்டதாக பிரபாகர் சைல் (37) என்பவர் கூறி பரபரப்பை உண்டாக்கினார். இதனால், அவருடைய சாட்சியம் முக்கியமானதாகக் கருதப்பட்டது.
இவர், கோசாவியிடம் மெய்காப்பாளராக பணியாற்றுவதாக கூறி இருந்தார். இதையடுத்து, போதை பொருள் வழக்கில் இவரும் தனிநபர் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த பிரபாகர் சைலுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் மரணம் அடைந்தாகவும் கூறப்படுகிறது. பிரபாகர் சைல் மரணத்தில் அவரது குடும்பத்தினர் எவ்வித சந்தேகமும் எழுப்பவில்லை என போலீசார் கூறி உள்ளனர்.
இருப்பினும், பிரபாகா் செயில் திடீா் மரணம் தொடா்பாக, காவல் துறை டிஜிபி ரஜினீஷ் சேத் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் திலீப் வால்சே பாட்டீல் கூறினாா். மனஉறுதியுடன் திடகாத்திரமாக இருந்த ஒருவா் எப்படி திடீரென உயிரிழப்பாா் என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.
newstm.in

