Theme Check

செம மூவ்! அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்!!

செம மூவ்! அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்!!

செம மூவ்! அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்!!
X

மதுரையில் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தொடர்பான அதிரடி உத்தரவை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதற்கு தொழிற்சாலைகள், வாகனங்கள் மூலம் வெளிவரும் புகை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே காற்று மாசை குறைக்கும் வகையில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் வாரத்தில் ஒருநாள் அரசு அதிகாரிகள் பொது போக்குவரத்து மூலமாகவோ அல்லது சைக்கிள், மின்சார சைக்கிள் போன்றவற்றின் மூலம் அலுவலகம் வர வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

Pollution

இதனை முறையாக கடைபிடிக்க பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன்படி, அரசு பேருந்துகள், சைக்கிள்கள் மூலம் அரசு ஊழியர்கள் அவ்வப்போது அலுவலகம் செல்ல தொடங்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரிய உந்துதலாக மாறி வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் குமார் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், வாரம் ஒருநாள் அரசு ஊழியர்கள் சொந்த வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். வாரந்தோறும் புதன்கிழமை பேருந்திலோ அல்லது நடந்தோ அலுவலகம் வர வேண்டும்.

delhi-pollution 1

இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவிற்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it