#BREAKING:-பொதுக்குழுவில் அவமானம்.. செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!
#BREAKING:-பொதுக்குழுவில் அவமானம்.. செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, சுமார் 1 மணி நேரத்தில் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.
மேலும், பொதுக்குழுவில் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

இதையடுத்து பேச முயன்ற ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக் குழுவை விட்டு வெளியே போகச் சொல்லி முழக்கங்களை எழுப்பினர்.
இதனால், மேடையில் இருந்து இறங்கி பொதுக் குழுவில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம். அத்துடன், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோரை எதிர்த்து கடுமையான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அவர்கள் மீது தீர்மான நகலை கிழித்து எறிந்தனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு ஊர்வலமாக வந்த பிரச்சார வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டிருந்தது. இதனால் கடும் கோபம் அடைந்த ஓ.பி.எஸ் வேறு வாகனத்தில் வீடு திரும்பினார். அதைத்தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

