Theme Check

செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்த அவலம்!! VIDEO

செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்த அவலம்!! VIDEO

செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்த அவலம்!! VIDEO
X

மின்சாரம் இல்லாததால், மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசாராம் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் அடிக்கடி மின்விநியோகம் தடைப்படுவதாகவும், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரும் உடனடியாக ஸ்டார்ட் ஆகவில்லை. இந்நிலையில் பெண் ஒருவருக்கு டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

bihar treatment 1

திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஜெனரேட்டர் ஆபரேட்டர் உடனடியாக ஜெனரேட்டரை இயக்காததால் டார்ச் உதவியுடன் சிகிச்சையை தொடர்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரம் இல்லாத நிலையில் சதர் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்வது இது முதல் முறையல்ல.


மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் வேறு வழியின்றி டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகவும், இதுபோன்ற மின்வெட்டை அடிக்கடி எதிர்கொள்வதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

newstm.in

Next Story
Share it