கடற்கரையில் குளித்தவரை கடித்து இழுத்து சென்ற சுறா.. பதற வைக்கும் வீடியோ !!
கடற்கரையில் குளித்தவரை கடித்து இழுத்து சென்ற சுறா.. பதற வைக்கும் வீடியோ !!

1963ஆம் ஆண்டுக்கு பிறகு சிட்னியில் நடந்த முதல் அபாயகரமான சுறா தாக்குதல் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே கடற்கரை உள்ளது. பிரபலமான இந்த கடற்கரையில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் சென்று உற்சாகமாக குளித்து வருவது உண்டு. இதனால் அந்த கடற்கரை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
இந்த நிலையில், கடற்கரையில் ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது திடீரென வந்த பெரிய சுறா மீன் ஒன்று, ஒருவரை தாக்கியது. இதில் அந்த நபர் உயிரிழந்தார். அதாவது, சுற்றுலாப்பயணிகள் உட்பட ஏராளம் பேர் கூடியிருக்க, அவர்கள் கண் முன்னே கடலில் நீந்திக்கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் ஒன்று கடித்துத் துண்டாக்கி கடலுக்கு அடியில் இழுத்துச் சென்றது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர்.
அப்போது, சுறா இழுத்துச்சென்றவரின் உடலில் சில பாகங்களும், ஆடையும் மட்டுமே கிடைத்தது. சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் சிட்னி கடற்கரையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் திகிலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, சிட்னி கடற்கரையில் நுழைய பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுறா மீன் தாக்குதல் நடத்திய இடத்தைச் சுற்றி அபாயப் பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
Swimmer killed by shark in horrifying attack in front of beachgoers. #Sydney #Australia #BuchanPoint #Malabar #GreatWhiteShark #Shark #Attack pic.twitter.com/eNZ6oeMQQL
— SALTWATER FISH 🎣🐟🐠 (@saltwaterfish) February 17, 2022
newstm.in