அப்போ ஷவர்மா..!! இப்போ பாஸ்தா சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... தொடரும் மரணங்கள்..!!
அப்போ ஷவர்மா..!! இப்போ பாஸ்தா சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... தொடரும் மரணங்கள்..!!

விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார்-பிரதிபா தம்பதியினர். இந்த காதல் ஜோடி கடந்த மாதம் தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து காதல் தம்பதிகள் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று மாலை விழுப்புரம் வந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் பாஸ்தா வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
சந்தோஷமாக வீட்டிற்கு சென்ற பிரதீபா சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளார். அப்போது பிரதிபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடற்கூறு ஆய்விற்கு பிறகுதான் பாஸ்தா சாப்பிட்டதால் அந்த பெண் உயிரிழந்தாரா என்பது தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

