Theme Check

அதிர்ச்சி! தீ விபத்தில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! தீ விபத்தில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! தீ விபத்தில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!
X

ஹைதராபாத்தில் பழைய பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஹைதராபாத் போய்கூடா என்ற பகுதியில் பழைய பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. அதில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவியது. 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி நடைபெற்றது. ஒருபுறம் தீயை கட்டுப்படுத்திக் கொண்டே மற்றொரு புறம் மீட்பு பணி நடைபெற்றது.

fire

உள்ளே இருந்து 11 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 11 பேரின் சடலங்கள் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

உயிரிழந்த 11 பேரும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும், மேலும் சிலர் உள்ளே சிக்கி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it