Theme Check

அதிர்ச்சி! 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

அதிர்ச்சி! 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

அதிர்ச்சி! 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!
X

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரங்கநாதபுரம் செங்காடு பகுதியை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி ராமக்கண்ணன் – பிரியா தம்பதிக்கு கிருத்திகா (17) என்ற ஒரு மகள் இருந்தார். அவர் நம்பியூரை அடுத்த கெடாரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார்.

அவர் பொதுத்தேர்வு எழுதிவிட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தார். தந்தை ராமக்கண்ணன் மீது கிருத்திகாவுக்கு அதிக பாசம் இருந்து வந்துள்ளது. இதனிடையே ராமக்கண்ணன் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருத்திகா மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

suicide

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் துப்பட்டாவால் கிருத்திகா தூக்குப்போட்டுக்கொண்டார். இதை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் ஓடிச்சென்று கிருத்திகாவை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே கிருத்திகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நம்பியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it