அதிர்ச்சி! போதைப் பொருள் கொடுத்து 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!!
அதிர்ச்சி! போதைப் பொருள் கொடுத்து 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!!

சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வடபழனியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தாய் தந்தை இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்படவே, பாட்டி சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
சிறுமி கூறிய விஷயங்களை கேட்டு அதிர்ந்துபோன பாட்டி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் தனது பேத்தியை சிலர் போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார்.

விசாரணையில், தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்கும் மாணவர் வசந்தகிரிஷ்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. வசந்தகிரிஷ் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதை வசந்தகிரிஷ் அவரது நண்பர்களான சதீஷ்குமார், விஷால், தனியார் கல்லூரி பகுதி நேர உதவி பேராசிரியர் பிரசன்னா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியை வசந்தகிரிஷின் குடியிருப்புக்கு அழைத்து சென்று 4 பேரும் அவருக்கு ஹூக்கா எனும் போதை பொருளை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வடபழனி அனைத்து மகளிர் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

மருத்துவ கல்லூரி மாணவர் வசந்தகிரிஷ்(20), சினிமா துணை நடிகர் சதீஷ்குமார்(22), அவரது நண்பர் விஷால்(19), கல்லூரி உதவி பேராசிரியர் பிரசன்னா(32) ஆகிய நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வசந்த் கிரிஷின் கல்லூரி படிக்கும் பெண் தோழி ஒருவர் சிறுமியின் வீட்டருகே வசித்து வந்ததும், அவர் தான் சிறுமியை தினமும் பானி பூரி சாப்பிட அழைத்து சென்று தனது நண்பரான வசந்த் கிரிஷ்க்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாக்கி பின் வசந்த் கிரிஷின் ஆசைக்கு இணங்க சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உதவி செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மூன்று பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
newstm.in

