அதிர்ச்சி! தேயிலை தோட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!!
அதிர்ச்சி! தேயிலை தோட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!!

கேரளாவில் தேயிலை தோட்டத்தில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தை சேர்ந்த தம்பதி 15 வயது மகளுடன் சில நாட்களுக்கு முன் கேரளாவுக்கு வந்தனர். அந்த தம்பதி இடுக்கி மாவட்டம் சந்தன்புரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்தனர்.
இந்நிலையில், அந்த சிறுமி தனது நண்பருடன் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அந்த சிறுமியின் நண்பனும் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர். அவர் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

தேயிலை தோட்டத்தில் சிறுமியும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் சிறுமியின் நண்பரை கடுமையாக தாக்கினர். பின்னர் அந்த சிறுமியை தேயிலை தோட்டத்தில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது.
சிறுமியின் ஆண் நண்பர் கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிசென்றது அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, தப்பியோடிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
newstm.in

