அதிர்ச்சி! ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் +2 மாணவர்கள்!!
அதிர்ச்சி! ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் +2 மாணவர்கள்!!

பிளஸ் டூ மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது அதிகரித்துவருகிறது. ஏனென்றால் மாணவர்களிடம் ஒழுக்கம் குறைந்தவருவதே அதற்கு காரணம்.
ஆசிரியர் சொல்வதை கேட்பது இல்லை, தவறாக வழிநடத்தும் சமூக ஊடகங்கள், இணையங்கள் என இன்றைய இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருகிறது.

மாணவர்கள், மாணவிகள் என பரஸ்பரம் தாக்கிக் கொள்வது பல்வேறு இடங்களில் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் பிளஸ் டூ மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாணவர் ஒருவர் மிகப் பெரிய மூங்கில் கம்பு ஒன்றை எடுத்துவந்து மற்றொரு மாணவரை தாக்கும் அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
newstm.in

