Theme Check

அதிர்ச்சி! தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு!!

அதிர்ச்சி! தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு!!

அதிர்ச்சி! தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு!!
X

செல்போன் டவர் அமைக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனமானது, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் புரசைவாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வணிக வளாகத்தில் இதன் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 26,000 செல்போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு பராமரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு குறிப்பிட்ட தனியார் டவர் சேவை நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தியது. இதனால் அந்த நெட்வொர்க் சேவை நிறுவனத்திற்காக இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட செல்போன் டவர்கள் செயல்படாமல் இருந்து வந்தன.

tower 2

தமிழகத்தில் இருக்கும் செல்போன் டவர்கள் செயல்படாமல் இருந்த போது அதை கண்காணித்து வந்த நிறுவனங்கள், கொரோனா காலகட்டத்தில் டவர் இருக்கும் இடத்திற்குச் சென்று கண்காணித்து பராமரிப்பை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் செயல்படாது இருந்த செல்போன் டவர்களை வேறு நெட்வொர்க் தேவைக்காக பயன்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, சில மாவட்டங்களில் டவர்கள் மாயமாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக டவர் அமைந்திருக்கும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட செல்போன் டவர் அமைக்கும் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tower 2

இதனை அடுத்து செயல்படாத செல்போன் டவர்களில் நிலைமை குறித்து தமிழகம் முழுவதும் அடுத்தடுத்த ஆய்வு மேற்கொண்டதில் 600க்கும் மேற்பட்ட டவர்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தை சாதகமாக பயன்படுத்தி மர்ம கும்பல் ஆளில்லாமல் கண்காணிப்பு இல்லாமல் இருக்கும் தங்களது செல்போன் டவர்களை திருடி செல்வதாக பாதிக்கப்பட்ட நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு செல்போன் டவர் அமைப்பதற்கு 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it