Theme Check

அதிர்ச்சி! தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்கள்!!

அதிர்ச்சி! தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்கள்!!

அதிர்ச்சி! தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்கள்!!
X

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் குச்சிபாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இங்குக் கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் 8 பேர் குளிக்கச் சென்றனர்.

அதில் ஏழு பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கிக் குளித்ததாக தெரிகிறது. அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற சுமந்தா,பிரியா , நவநீதா ஆகிய மூன்று இளம் பெண்கள், சங்கீதா , மோனிஷா , திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகிய நான்கு சிறுமிகள் என மொத்தம் 7 பேர் தண்ணீரில் மூழ்கினர்.

kedilam river 1

இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7 பேரையும் சடலமாக கண்டெடுத்தனர். அவர்களது உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்கச் சென்ற 7 பெண்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it