அதிர்ச்சி! ஒரே வீட்டில் 9 பேர் மர்மமான முறையில் மரணம்!!
அதிர்ச்சி! ஒரே வீட்டில் 9 பேர் மர்மமான முறையில் மரணம்!!

மகாராஷ்டிராவில் ஒரே வீட்டில் 9 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கிலி மாவட்டத்தில் ஹைசால் என்ற பகுதியில் வீடு ஒன்றில் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் 9 பேர் வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

வீட்டில் 3 உடல்கள் ஓரிடத்திலும், 6 உடல்கள் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் கிடந்துள்ளன. இந்த மரணத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தற்கொலை செய்திருக்க கூடும் என காவல்துறையின் ஒரு தரப்பினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே சரியான காரணம் தெரியவரும்.
ஒரே வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்ம மரணம் அடைந்து கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in

